பிரான்ஸ்

பிரான்ஸில் அதிரடியாக கைதான ஆசிரியர்!

Drancy (Seine-Saint-Denis) நகரில் ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதம் மற்றும் அடிப்படைச் சிந்தனைகள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அவர் பெப்ரவரி 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு (PNAT மேற்கொண்டிருந்த விசாரணைகளின் அடிப்படையில், அவர் பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தயாராக இருந்ததாகவும், இணையத்தில் ஜிகாதி பயங்கரவாதம் தொடர்பாக தேடி அறிந்ததாகவும், தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் முனைப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு 13 ஆம் திகதி அன்று அவர் தடுப்புக்காவல் சிறையில் அடைக்கப்பட்டார்.

26 வயதுடைய குறித்த ஆசிரியர், ஜிகாதி பயங்கரவாதத்தை பெருமைப்படுத்தும் பாடல்களை பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்ததாகவும், ஜிகாதி சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதாகவும் PNAT தெரிவித்துள்ளது.

Back to top button