பிரான்ஸ்

பிரான்ஸில் ஆறு மாதங்களில் 900 பேர் கைது!

#france news#

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 900 பேர் கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிக தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜொந்தாம் வீரர்கள் நாடு முழுவதும் பலத்த தேடுதல் வேட்டையும், பலரை கைதும் செய்துள்ளனர்.

அவ்வாறாக கடந்த ஆறு மாதங்களில் 900 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொந்தாம் படையின் உயரதிகாரி Christian Rodriguez தெரிவித்தார். குறிப்பாக Nîmes, Valence, Garge-lès-Gonesse, Poitiers மற்றும் Tours நகரங்களில் அதிகளவான கைது சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தலில் மிக மேல்மட்டங்களில் உள்ள பலரை கைது செய்துள்ளதாகவும், வலைப்பின்னல் போன்று செயற்பட்ட பல குழுவை முழுவதுமாக அழித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Back to top button