பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் மூவர் பலி! மோதியெறிந்த மகிழுந்து!
அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று பாதசாரிகளை மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை இந்த விபத்து Steenbecque (Nord) நகரில் இடம்பெற்றது. காலை 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது. வீதி கடவையில் வீதியை கடக்க முற்பட்ட பாதசாரிகள் மீது அதிவேகமாக பயணித்த மகிழுந்து ஒன்று மோதியுள்ளது.
இதில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். அவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாக, மேலும் ஒருவர் சில நிமிடங்களின் பின்னர் பலியானார்.
நான்காவது நபர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.