தாயகம்

இலங்கையில் நடந்த கொடூரம்! கருவில் இருக்கும் குழந்தையை கொன்ற தந்தை!

# France news#

கொழும்பில் கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இன்று 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேராவினால் உத்தரவிடப்பட்டிருந்தது.


இது கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் சட்ட வைத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரின் கணவர் மனைவியுடன் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கணவர் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் சந்தேக நபரான கணவர் , மனைவியின் வயிற்றில் காலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கவலைக்கிடமான நிலையில் இருந்த மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Back to top button