உலகம்

லண்டன் மக்களை நடுங்க வைத்த சம்பவம்! பெரும் பரபரப்பு!

லண்டனில் கிளாப்ஹாம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது மூன்று பேர் காயமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 4.59 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவயிடத்தில் மூவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவையும் உறுதி செய்துள்ளது.

பெண் ஒருவர் சாலையை கடக்கவிருந்த நிலையில், ஆண்கள் இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பதிவு செய்துள்ளார். பெண் மீது சுட்டுள்ளனர் இச்சம்பவத்தில் மூவர் காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கியால் பெண் மீது சுட்டுள்ளனர்.

மட்டுமின்றி அந்த இருவரும் சம்பவயிடத்தில் இருந்தும் தப்பியுள்ளனர். துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளதாகவும், பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தப்பிய இருவரும் இதுவரை சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Back to top button