பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கடத்தப்பட்ட இளம் பெண்கள்!

இரு இளம் பெண்களை கடத்தி, வீடொன்றில் பூட்டி வைத்திருந்த மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த பெண்ணின் தந்தைக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்த குறித்த இளம் பெண், தன்னை மூவர் கொண்ட குழு கடத்தி வைத்திருப்பதாகவும், Avenue de Flandre வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


அதையடுத்து பெண்ணின் தந்தை காவல்துறையினரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் அப்பெண்ணின் தொலைபேசி இருக்கும் இடத்தை கண்டறிந்த காவல்துறையினர், அதிரடியாக நுழைந்து சிறுமியை மீட்டனர். அங்கு மற்றுமொரு இளம்பெண்ணும் கடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப்பணியின் போது அங்கு, இரு பெண்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை எனவும், பின்னர் விசாரணைகளை அடுத்தே, நேற்று சனிக்கிழமை காலை கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் காவல்துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button