தாயகம்

வெளிநாடு ஒன்றில் பதுங்கி இருக்கும் இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை!

டுபாய் நாட்டில் பாதாள உலக குழுவினர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். அவர்கள் பதுங்கியிருக்கும் இடங்கள் தொடர்பில் தகவல் பெற்று அதனை பொலிஸாரிடம் வழங்கி அவர்களை டுபாயில் வை்ததே கைது செய்ய இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் கைது செய்யப்படும் நபர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கையும் இலங்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பாதாள உலகக் குழுவினர் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை அந்நாட்டு பொலிஸாருக்கு வழங்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என தெரியாத காரணத்தினால், துப்பு வழங்குபவர்கள் ஊடாக தகவல் பெற்று அந்நாட்டு பொலிஸாரை அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்து பாதாள உலகத்தை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கமைய, பாதாள உலகக் குழுவினர் அளித்த தகவலுக்கமைய, டுபாயில் பொலியஸாரிடம் மன்னா ரமேஷ் என்பவர் சிக்கியுள்ளார்.

Back to top button