பிரான்ஸ்
🇫🇷பிரான்ஸில் மர்ம நபரால் பதற்றம்!
முதியவர்களை ஆற்றி தள்ளிவிடும் மர்ம நபர் ஒருவரை தேடிவருவதாக Val-de-Marne மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Créteil ஆற்றுப்பகுதிக்கு ஓய்வெடுக்க வரும் முதியவர்களை, அவர்கள் அறியாத வண்ணம் மர்ம நபர் ஒருவர் திடீரென தள்ளி விழுத்திவிட்டு அங்கிருந்து ஓடி மறைகிறார். கடந்த வாரத்தில் இதுபோல் மூன்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
முதியவர்கள் 10°C வரையுள்ள குளிர் தண்ணீரில் மூழ்கிய நிலையில், பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர்கள் மீட்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதை அடுத்து, தற்போது அங்கு வரும் முதியவர்கள், துணைக்கு ஒருவரை அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் அம்மாவட்ட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து, குறித்த மர்ம நபரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.