தாயகம்

இலங்கையில் மீண்டும் கோர சம்பவம்! இருவர் வைத்தியசாலையில்!

கொழும்பு வெலிவட்ட அதிவேக நெடுஞ்சாலையில் கொள்கலன் லொறி ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (02-03-2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொள்கலன் வாகனம் மாத்தறையில் இருந்து கடவத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பயணித்த கெப் வாகனம் கொள்கலனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப் வாகன ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

Back to top button