பிரான்ஸ்

பிரான்ஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்! பெருமளவில் குவிந்த பெண்கள்!

நேற்று மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தலைநகர் பரிஸ் உள்ளிட்ட பெரும் நகரங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டம் 200 நகரங்களில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பரிஸ், Rennes, Nice, Le Mans, Avignon, Bayonne, Toulouse, Clermont மற்றும் Bordeaux போன்ற நகரங்களில் பெருமளவான பெண்கள், ஆண்கள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் சீண்டல்களை கண்டித்து அவர்கள் குரல் எழுப்பினர். ’எனது உடல், எனது தெரிவு’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாகைகளை கைகளில் பிடித்திருந்தனர்.

பிரான்சின் சட்டமாக்கப்பட்டுள்ள கருக்கலைப்பு சுதந்திரத்தையும் வரவேற்றனர்.
அதேவேளை, ஆண் பணியாளர்களை விட பெண்கள் 14.9% சதவீதம் குறைவான ஊதியம் பெறுவதாகவும் குற்றம்சாட்டினர்.

Back to top button