தாயகம்

யாழில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த குடும்ப பெண்!

திடீரென வலிப்பு ஏற்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் இன்றைய தினம் (07-01-2024) காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 63 வயதான ராசா விஜயராணி என்ற இரு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு கடந்த 28 ஆம் திகதி திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் மூளையில் இரத்தக் கட்டி உறைந்ததே அவரது மரணத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

Back to top button