பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் இன்று இடம்பெற்ற துயர சம்பவம்! பரிதாபமாக பறிபோன உயிர்!

பேருந்து ஒன்றில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று ஜனவரி 8 ஆம் திகதி, திங்கட்கிழமை காலை இச்சம்பவம் Pantin (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. காலை 7.10 மணி அளவில் Pantin நகர பேருந்து நிலையத்தின் முன்பாக 61 ஆம் இலக்க பேருந்துடன் பாதசாரி ஒருவர் மோதுண்டுள்ளார். இச்சம்பவத்தில் குறித்த நபர் படுகாயமடைய, மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டனர்.

மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் உயிரிழந்துள்ளார்.
பாதசாரிகள் கடவை அருகில் இருந்தும் வீதியினால் குறித்த நபர் வீதியை குறுக்கறுக்க முற்பட்டதாக அறிய முடிகிறது. RATP சாரதி மதுபோதை மற்றும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில் அவர் மது எதுவும் உட்கொண்டிருக்கவில்லை என தெரியவந்தது. மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button