உலகம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் மீண்டும் கொவிட் தொற்று!மாஸ்க் கட்டாயம்!

கொவிட் தொற்று மீண்டும் உருவெடுக்க கூடிய அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்பானிஷ் சுகாதார அமைச்சர் Monica Garcia தெரிவிக்கையில், புதன்கிழமை முதல் நாடும் முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் மாஸ்க் கட்டாயம் என குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலேயே அமைச்சர் மோனிகா கார்சியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடல்நிலை பாதிக்கக்கூடிய மக்களை பாதுகாக்கும் பொருட்டே இந்த முடிவு என்றும், இது தாமாகவே மக்கள் சிந்தித்து எடுக்க வெண்டிய முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் முழுவதும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் மாஸ்க் கட்டாயம் என்றும் தனியார் கிளினிக்குகள், மருந்தகங்கள் மற்றும் பல் மருத்துவமனைகள் போன்ற பிற மருத்துவ வசதிகளிலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதனிடையே, பல ஸ்பானிஷ் பிராந்தியங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்கனவே நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடந்த வாரம் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ளன. இந்த நிலையில் மாஸ்க் கட்டாயம் என்பதை ஸ்பெயின் அரசாங்கம் நாடு முழுவதும் நீட்டிக்க திங்களன்று முன்மொழிந்துள்ளது.
மேலும், நோய்த்தொற்றுகள் இரண்டு வாரங்களுக்கு சரிவடைந்தால் பிராந்தியங்கள் இந்த கட்டுப்பாடுகளை நீக்க முடியும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை மொத்தமாக உலுக்கிய கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து மாஸ்க் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகளை கைவிட்ட கடைசி ஐரோப்பிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின். 2023 பிப்ரவரி வரையிலும் பொது பேருந்துகளில் மாஸ்க் கட்டாயம் என்ற கட்டுப்பாடு ஸ்பியினில் அமுலில் இருந்தது. சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்களில் ஜூலை மாதம் தொடர்புடைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Back to top button