பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட பறவைக்காய்ச்சல்! வெளிவந்த முக்கிய தகவல்!

பிரான்சிலுள்ள வாத்துப்பண்ணை ஒன்றில், தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் பிரான்சிலுள்ள Vendee என்னுமிடத்தில் அமைந்துள்ள வாத்துப்பண்ணை ஒன்றிலுள்ள வாத்துகளுக்கு, நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் அந்த பண்ணையிலுள்ள வாத்து ஒன்றிற்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இம்மாதம், அதாவது, ஜனவரி 2ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பண்ணையிலுள்ள 8,700 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளன.


டிசம்பரில், அதிக அபாய பகுதிகளில் உள்ள வாத்துக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த குறிப்பிட்ட பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு அரசு உத்தரவின்படி மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

Back to top button