உலகம்

மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றி திரிந்த மருத்துவரால் அதிர்ச்சி!

இந்தியாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் சத்ரபதி சப்கஞ்ச்நகர் மாவட்டம் பிட்கின் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

போதைப்பழக்கத்திற்கு அடிமையான குறித்த மருத்துவர் மதுபோதையில் மருத்துவமனை வளாகத்தில் நிர்வாணமாக சுற்றித்திரிந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு செல்லும்முன் மருத்துவர் ஆடையின்றி நிர்வாணமாக சுற்றித்திரிந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை
இந்த சிசிடிவி காட்சிகள் தொடர்பான காணொளி தற்போது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Back to top button