பிரான்ஸ்

🔴🇫🇷பாரிஸில் வசிப்பவர்கள் ஏழு மணிக்குள் வீடு திரும்புங்கள்! வெளியான அறிவிப்பு!

பரிசில் வசிக்கும் மக்கள் மாலை 7 மணிக்கு முன்பாக வீடு திரும்புவதை பரிஸ் காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். பரிஸ் உள்ளிட்ட இல் து பிரான்சுக்குள் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவு கடும் பனிப்பொழிவு பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘பரிசில் வசிக்கும் மக்கள் மாலை 7 மணிக்குள்ளாக வீடு திரும்புவது பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துபவர்கள் இதனை கருத்தில் கொள்ளவும்!’ என பரிஸ் காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர். அதேவேளை நாட்டின் 19 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று மாவட்டங்களுக்கு மழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(விபரங்களை புகைப்படத்தில் காணலாம்)

Back to top button