மாணவி கூட்டு வன்புணர்வு! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவியை கடத்திச் சென்று மாணவியை தாக்கி, கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சந்தேகநபர்கள் மூவரும் கைது
சந்தேகநபர்கள் கடந்த 5ஆம் திகதி மாணவியை ஆரியம்பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரியம்பதி பகுதியைச் சேர்ந்த 26-32 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவித்த பொலிஸார், கைதானவர்களை இன்றையதினம் (8) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.