பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் மாவட்டங்களுக்கு மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

பனிப்பொழிவு காரணமாக இன்று ஜனவரி 16, செவ்வாய்க்கிழமை நாட்டின் 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் வடக்கு பிரான்சின் பெரும் பனிபொப்பொழிவு இடம்பெறும் எனவும், இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் பனிப்பொழிவுக்கு உள்ளாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Manche, Calvados, Orne, Eure-et-Loir, Loiret, Yonne, Côte-d’Or, Haute-Marne, Haute-Saône மற்றும் Belfort பிராந்தியம் அத்துடன் இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாளை பிரான்சின் உச்சக்கட்ட பனிப்பொழிவு பதிவாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Back to top button