தாயகம்

யாழில் மீண்டும் பயங்கரம்! பரிதாபமாக பலியான 19 வயது இளைஞன்!

யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Back to top button