உலகம்தாயகம்

கனடா வாழ் இலங்கை குடும்பத்தின் நெகிழவைத்த செயல்!

கனடா வாழ் குடும்பம் ஒன்று, இலங்கையிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பல மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களை வழங்கியுள்ளது. பல மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பத்தினால் 57 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் வழங்கப்பட்டது.

இதன் பெறுமதி 470 மில்லியன் ரூபாவாகும். சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கே தலைமையில் இந்த உபகரணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.


தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் ஒவ்வொன்றும் தலா 3 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் , 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தாயகத்திற்கு உதவி செய்த கனடாவாழ் குடும்பத்திற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Back to top button