தாயகம்

யாழில் 13 வயது சிறுமியால் கைதுசெய்யப்பட்ட பெற்றோர்கள்!

யாழில் உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸாரினால் சிறுமி கைது செய்யப்பட்டார்.

சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில்,
தினமும் உணவு பொருள் விற்க வரும் சிறுமி கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும், உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்து, அவற்றை விற்பனை செய்து விட்டு, மீண்டும் இரவு 08 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு செல்லப்பட்டது. இதனையடுத்து 13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Back to top button