பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் புதிய பிரதமரின் முதல் பயணம்! உறுதியளிப்பு!

நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட கேப்ரியல் அத்தால், இன்று தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணமாக பா-து-கலே பயணமாகியிருந்தார். தொடர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பா-து-கலே மாவட்டத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார்.

‘உங்களை ஒருவரும் மறக்கமாட்டார்கள்’ என தெரிவித்த பிரதமர், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நாம் உருவாக்கித்தருவோம் எனவும் உறுதியளித்தார். ”ஒட்டுமொத்த பிரான்சும் உங்களுடனேயே உள்ளது என்பதை தெரிவிக்கவே நான் முதலில் இங்கு வந்தேன்’ என குறிப்பிட்ட பிரதமர், தொடர் மீட்புப்பணியில் உழைத்து வரும் அனைத்து தீயணைப்பு வீரர்களுக்கும் நன்றிகளையும் தெரிவித்தார். கேப்ரியல் அத்தால், இன்று ஜனவரி 9, செவாய்க்கிழமை நாட்டின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

Back to top button