தாயகம்

யாழ் வீதியில் பயணித்த இளைஞனுக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!

யாழில் வீதியில் பயணித்த இளைஞனை தாக்கி , அவரது மோட்டார் சைக்கிளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சரமாரியாக தாக்குதல் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இருந்து நாவற்குழி நோக்கி , யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் “வேகோ” ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை அரியாலை பகுதியில் வழிமறித்த கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கியுள்ளது.

வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்ப , மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு, இளைஞன் ஓடியுள்ளார். அதன் போது , தாக்குதலாளிகள் இளைஞனின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு , தப்பி சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை பறிகொடுத்த இளஞர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Back to top button