தாயகம்

விஜய்யை இலங்கையில் சந்திக்க ஆசைப்படும் ராஜபக்சே குடும்பம்?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest Of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் சகோதரி பவதாரணி மறைவையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

படத்தின் 50 சத வீத படப்படிப்புகள் முடிந்துள்ள நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக விரைவில் படக்குழு இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விஜய் படப்பிடிப்புக்காக இலங்கை வந்தால் அவரை சந்திக்க ராஜபக்சே குடும்பத்தினர் ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய், ராஜபக்சே குடும்பத்தினரை சந்தித்தால் அது அவருக்கு பின்னடைவாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Back to top button