பிரான்ஸ்

பாரிஸில் பரபரப்பு! அல்லா அக்பர் என கோஷம்!

பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் உள்ள Louis Vuitton காட்சியறையில் அல்லா அக்பர் என கோஷமிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த காட்சியறைக்கு இன்று ஜனவரி 11 ஆம் திகதி வியாழக்கிழமை வருகை தந்த நபர் ஒருவர் கைகளில் வைத்திருந்த சூட்கேஸ் பெட்டி ஒன்றை அங்கு வைத்து விட்டு அல்லா அக்பர் (இறைவனே பெரியவன்) என கோஷமிட்டுள்ளார்.


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக செயற்பட்ட காட்சியறையின் பாதுகாவலர் குறித்த நபரை மடக்கிப்பிடித்ததோடு காவல்துறையினரையும் அழைத்துள்ளார். குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எடுத்து வந்திருந்த சூட்கேஸ் பெட்டியில் எவ்வித ஆபத்தான பொருட்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button