பிரான்ஸ்

பிரான்ஸ் வங்கி கடன்! அறிமுகமாகும் புதிய வசதி!

பொருளாதார அமைச்சர் Bruno Le. Mayor, நேற்று பெப்ரவரி 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சில வங்கி திட்டங்களை விவசாயிகளுக்கு அறிவித்தார். வங்கி கடன்களில் சிக்கி தவிக்கும் விவசாயிகளுக்காக, குறைந்த அளவு வட்டியுடன் புதிய கடன்களையும், கடன் கட்டுவதற்கான கால அளவை பிற்போடக்கூடிய வசதியினையும் வங்கிகள் ஏற்படுத்திக்கொண்டுக்கும் என பொருளாதார அமைச்சர் உறுதியளித்தார்.

அதன்படி, கடன்களுக்கான வட்டி ‘0 இல் இருந்து 2.5% வரை’ சூழ்நிலைகளுக்கு ஏற்றால் போல் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வங்கிக்கு கடன் செலுத்துவதை ஒருவருட காலம் வரை பிற்போட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை, விவசாயிகளின் நலனுக்காக 2 பில்லியன் யூரோக்கள் நிதியை அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்தொகை வரும் மே 1 ஆம் திகதியில் இருந்து விடுவிக்கப்படும் எனவும் அறிய முடிகிறது.

Back to top button