பிரான்ஸ்

பிரான்ஸில் தேடப்படும் மாணவன்! விடப்பட்ட கொலை மிரட்டல்!

பேராசியர் ஒருவருக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Var மாவட்டத்தின் La Seyne-sur-Mer நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள Henri-Wallon கல்லூரியில் பயிற்றுவிக்கும் பெண் பேராசிரியர் ஒருவருக்கு குறுந்தகவல் ஊடக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ‘அவரின் கழுத்தை துண்டாக்குங்கள்.

கல்லூரியை கொளுத்துங்கள்!’ என அந்த குறுஞ்செய்தியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து பேராசிரியர் காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் பணியாற்றும் கல்லூரியில் இருந்து அண்மையில் நிறுத்தப்பட்ட முன்னாள் மாணவன் ஒருவரே இந்த கொலை மிரட்டலை விடுத்ததாகவும், ‘குரல் வழி செய்தி (message vocal) மூலமாக இந்த செய்தி மாணவர்களிடையே பகிரப்பட்டு வருவதாகவும், அதில் மாணவன் ஒருவரே ஆசிரியருக்கு அதனை அனுப்பி அவரை எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

Back to top button