பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் மருத்துவமனைகளில் பாகுபாடு! பாதிக்கப்படும் மக்கள்!

மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்படும் நோயாளிகளில் பாகுபாடு காட்டப்படுவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவசரப்பிரிவு மருத்துவப்பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளிடம் பாகுபாடு காட்டுவதாகவும், இதனால் பெண்கள் மற்றும் கறுப்பின மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது நோய்களை மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நிகராக கருதுவதில்லை எனவும், இதனால் உயிரிழப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, மொனாக்கோ போன்ற நாடுகளில் இந்த ஆய்வினை ஐரோப்பிய அவசரப்பிரிவு மருத்துவத்துக்கான பத்திரிகை வெளியிட்டுள்ளது.

Back to top button