பிரான்ஸில் இரத்தாகும் தொடரூந்து சேவை! வெளியான முக்கிய தகவல்!
இந்த வாரை இறுதியில் பயணச்சீட்டுப் பரிசோதகர்களின் பணிப்புறப்பணிப்பால் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொலைதூரத் தொடருந்துச் சேகைள் இரத்துச் செய்யப்பட்டு விடுமுறையில் செல்லும் பயணிகள் பெரும் இன்னல்களிற்கு உள்ளாகினர். இந்நிலையில் SNCF இன் சமிக்ஞை மற்றும் ஒழுங்கை மாற்றுபவர்களான Aiguilleurs 23ம் திகதி வார இறுதியில் பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.
பயணச்சீட்டுக் கண்காணிப்பாளர்கள் இல்லாமல் கூட தொடருந்து பயணிக்க முடியும். ஆனால் சமிக்ஞை மற்றும் ஒழுங்கை மாற்றம் இல்லாது தொடருந்துகள் பயணிக்க முடியாது. 23ம் திகதி வார இறுதி மீண்டும பள்ளி திரும்பும் மற்றும் விடுமுறை முடிந்து திரும்புபவர்கள் என பல்லாயிரம் பயணிகள் பெரும் சிக்கல்களிற்கு உள்ளாக உள்ளனர். SNCF பணியாளர்களின் பணித்தரம் மிக மோசமாக உள்ளது எனவும் அவர்களிற்கான ஊக்கத்தொகை மற்றும் ஊதியம் அதிகரிக்கப்படுவதுடன், அவர்களின் பணித்தரத்தினையும் மேம்படுத்தக்கூறி தொடருந்து சேவைகளின் தொழிற்ச்ஙகங்கள் அறிவித்துள்ளன.