தாயகம்

யாழில் தென்னை மரத்தில் பரவும் புதிய நோய்! எவ்வாறு கட்டுப்படுத்துவது?

#france news#

தற்போது தீவிரமாகப் பரவிவரும் #தென்னை #வெள்ளை #

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. பூச்சிகள் மற்றும் அவற்றின் இயல்புகள், வாழ்க்கைவட்டம் பற்றிய குறிப்புகளை கடந்த ஒக்டோபரில் நாம் பகிர்ந்திருந்த எச்சரிக்கை விழிப்புணர்வுக்குறிப்பில் தந்திருந்தோம். மழைகாலத்தில் பசளை மற்றும் வறட்சிக் காலத்தில் நீர்ப்பாசனத்தின் அவசியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தோம்.

அதனால் நேரடியாக விடயத்திற்கு வருவோம். இப்பூச்சிகள் செவ்விளநீர், தென்னை மட்டுமில்லாமல், வாழை, பாக்கு, அலங்கார பாம் ஆகிய தாவரங்களையும் தாக்குகின்றமை கிழக்கில் அவதானிக்கப்படுகிறது. தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் கீழ்வரும் நஞ்சற்ற முறைகளைக் கடைபிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

மஞ்சள் நிறமுடைய பொலீத்தீன் தாள்களில் எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில், 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்தழிக்கலாம்.

விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் 6 முதல் 11 மணி வரையிலும் ஒளிரசெய்ய வேண்டும்.

பூச்சிகளின் வளர்ச்சியைத் தடுக்க, ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்துக் கட்டுப்படுத்தலாம்.

சவர்க்கார தண்ணீரை ஓலையின் அடிப்பகுதி நன்றாக நனையுமாறு தெளிக்க வேண்டும்.

கீழ்வரும் முறைகளிலும் கட்டுப்படுத்தலாம் எனக்கூறுகின்றன.

வேப்பங்கொட்டைச் சாறு 5% , வேப்பெண்ணெய் 5 மில்லி தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

நொச்சி இலைச்சாறு (50 கிராம்/ லீட்டர்)

நித்திய கல்யாணி / பட்டிப்பூ இலைச் சாறு (50 கிராம் லிட்டர்)

ஓலையில் கரும்பூஞ்சணத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த 25 கிராம் கோதுமை மா (All purpose flour) , அரிசிக் கஞ்சி கரைசல் ஆகிய ஏதாவது ஒன்றை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால், காயும்போது பூஞ்சணம் உதிர்ந்துவிடும்.

உயிரியல் கட்டுப்பாட்டு முறையாக வேர்ட்டிசீலியம் லக்கானி ஒரு லீட்டர் நீருக்கு 30 மில்லி கலந்து 7 நாட்கள் இடைவெளியில் இருமுறை அல்லது மும்முறை தென்னோலைகளில் நன்கு விசிற இந்த நோய்த்தாக்கம் கட்டுக்குள் வரும்

Back to top button