தாயகம்

யாழில் எமனாக வந்த நாய்! பரிதாபமாக பறிபோன உயிர்!

நாவற்குழி செம்மணி வீதியுடாக முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பம் நாய் குறுக்கே பாய்ந்ததில் விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்துள்ளார்

மனைவி மற்றும் இரண்டு வயது ஆண் குழந்தை காயமடைந்துள்ளனர் இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் நாவற்குழி செம்மணி வீதியில் இடம்பெற்றுள்ளது படுகாயமடைந்த குறித்த இளம் குடும்பத்தர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உயிரிழந்தார்

சம்பவத்தில் சாவகச்சேரி நாவற்குழி பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை அமல்ராஜ் வயது 35 என்ற இரண்டு வயது பிள்ளையின் தந்தை உயிரிழந்தவர் ஆவார் திருமணம் செய்து மூன்று வருடங்களில் இவ் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது

Back to top button