பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல்!

ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கிக்கொண்டு இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை, பெப்ரவரி 12 ஆம் திகதி மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் மாலை 6.50 மணி அளவில் இரு நபர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். முதலாம் நபர் மற்றவரைக் கத்தியால் குத்தியுள்ளார். பின்னர் இரண்டாம் நபர் கத்தியை பறிந்து மற்றவரை தாக்கியுள்ளார்.


காவல்துறையினர் அழைக்கப்பட்டு, இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவரது உயிருக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த இரண்டாவது நபர் முதலில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும், பின்னர் அவர் துரத்தி பிடிக்கப்பட்டு காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button