பிரான்ஸ்

பிரான்ஸ் இளைஞனின் அதிர்ச்சி செயல்!

பிரான்ஸ் சமூக வலைதள ஆர்வலர், பப்ரிஜியோ வில்லாரி மோரோனி, தனது 9 மணி முதல் 5 மணி வேலையை விட்டு வெளியேறியதை மழையில் ஆட்டம் போட்டு கொண்டாடும் வீடியோ இணைய உலகைக் கவர்ந்துள்ளது.

மழையில் நனைந்து கொண்டாட்டம்
பிரான்ஸ் சமூக வலைதள ஆர்வலர்(social media influencer), பப்ரிஜியோ வில்லாரி மோரோனி(Fabrizio Villari Moroni), தனது 9 முதல் 5 வேலையை விட்டு வெளியேறியதை மழையில் ஆட்டம் போட்டு கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இணையத்தில் வெளியிட்ட மோரோனி, அதில் “உள்ளடக்கத்தை உருவாக்குதல்”(content creation) உடன் தனது வழக்கமான வேலையை சமநிலைப்படுத்துவதில் உள்ள சிரமத்தை குறைத்து மதிப்பிட்டதாக ஒப்புக்கொண்டார்.

மேலும், “நான் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் இருக்க முடியும் என்ற என் திறனை நான் மிகைப்படுத்திவிட்டேன்,” என்று அவர் எழுதினார். பப்ரிஜியோ வில்லாரி மோரோனி மழையில் ஆடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் பரவி 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதில், மோரோனி மகிழ்ச்சியுடன் குதித்து சுழல்கிறார், அத்துடன் பாரம்பரிய 9 முதல் 5 வேலை அட்டவணையில் இருந்து தான் விடுபட்டதையும் தெளிவாக வீடியோவில் வெளிப்படுத்துகிறார்.

Back to top button