பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸில் மீட்கப்பட்ட ஆயுதங்கள்! சுற்றிவளைத்த காவல்துறை!

வீடொன்றை ஆக்கிரமித்து – அங்கு ஆயுதங்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் வைத்திருந்த ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Sète (Hérault) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் காவல்துறையினருக்கு வந்த தொலைபேசி அழைப்பினூடாக ஆரம்பித்திருந்தது. வீடொன்றின் உரிமையாளர் ஒருவர் அந்நகர காவல்துறையினரை அழைத்து, தனது வீட்டினை ஒரு சிலர் ஆயுதமுனையில் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து அதிரடியாக குறித்த வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர், வீட்டில் இருந்த அந்நியர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

வீட்டின் முகப்புக் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், அதனை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்நுழைத்து, அங்கு பதுங்கி இருந்தவர்களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து Kalashnikov துப்பாக்கி, 25 அலுமினிய தோட்டாக்கள், கஞ்சா. கொக்கைன் போன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.


அத்துடன் 16 தொடக்கம் 26 வயதுக்குட்பட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகருகே உள்ள சிறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Back to top button