பிரான்ஸ்

பிரான்ஸ் காவல்துறையை மோதித் தள்ளிய இளைஞன்!

காவல்துறை வீரர் ஒருவரை மகிழுந்தினால் மோதி தள்ளிவிட்டு தப்பி ஓடிய இளைஞன் ஒருவர், துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை மாலை இச்சம்பவம் Cergy (Val-d’Oise) நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.45 மணி அளவில் A15 நெடுஞ்சாலையில் கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது, மகிழுந்து ஒன்று அதிவேகமாக பயணித்துள்ளது. அதனை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர்.


ஆனால், காவல்துறை வீரரை மகிழுந்து மோதி தள்ளியது. இதில் காவல்துறை வீரர் முழங்காலில் காயமடைந்தார்.
பின்னர் மகிழுந்து அங்கிருந்து தப்பில் Cergy-le-Haut பகுதி வழியாக D14 நெடுஞ்சாலைக்குள் நுழைந்தது. காவல்துறையினர் துரத்திச் சென்று குறித்த மகிழுந்தை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

இதற்காக துப்பாக்கிச்சூடும் மேற்கொண்டனர். மகிழுந்தை செலுத்தியது 19 வயதுடைய இளைஞன் எனவும், அவர் ஏற்கனவே இலத்திரனியல் காப்பு அணியப்பட்டு காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Back to top button