உலகம்

சுவிஸ் அரசின் முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்தவர்கள் கூடுதல் வரி செலுத்தும் ஒரு நிலைமை உள்ளது. அதாவது, சுவிட்சர்லாந்தில், தனித்தனியாக இருவர் சம்பாதிக்கும் வருமானத்தை விட, திருமணம் செய்துகொள்ளும்போது, தம்பதியராக இருவரின் வருமானமும் சேர்த்து மொத்தமாக கணக்கிடும்போது அதிக வருவாய் வருவதால், திருமணம் செய்த தம்பதியர், தாங்கள் தனியாக இருந்தபோது செலுத்தியதைவிட கூடுதல் வரி செலுத்தவேண்டியதாகிறது.


இதை சுவிஸ் மக்கள் திருமண அபராதம் என்று அழைக்கிறார்கள். அரசு விடுத்துள்ள கோரிக்கை
ஆகவே, திருமணம் ஆவதால் அதிக வரி செலுத்தவேண்டிய நிலை, மற்றும் தம்பதியருக்கு குறைவான ஓய்வூதியம் போன்ற பிரச்சினைகள் குறித்து, பல அரசியல்வாதிகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருமணமானவர்களும் தனித்தனியே வரி செலுத்தும் வகையில் சட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தும்படி, நாடாளுமன்றத்தை சுவிஸ் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Back to top button