பிரான்ஸ்

பிரான்ஸில் 187 பேர் அதிரடி கைது!

மார்செ மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு எதிராக கடந்தவாரத்தில் பாரிய தேடுதல் வேட்டை இடம்பெற்றிருந்தது. அதேபோன்ற ஒரு தேடுதல் வேட்டை இன்றூ மார்ச் 25 ஆம் திகதி திங்கட்கிழமையும் இடம்பெற்றது.
place nette XXL” என பெயரிடப்பட்ட இந்த ‘ஒப்பரேஷன்’ Lille நகரை சூழ உள்ள பகுதிகளில் இடம்பெற்றிருந்தது.

அதில் காவல்துறையினர் ஜொந்தாமினர் என மொத்தம் 900 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். உள்துறை அமைச்சர் Gérald Darmanin சம்பவ இடத்துக்கு இன்று காலை நேரில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

மொத்தமாக 187 பேர் இன்று நண்பகல் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த வாரங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக இதுபோன்ற பாரிய நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button