பிரான்ஸ்
பிரான்ஸ் பூச்சி கொல்லியால் மூவர் மருத்துவமனையில்!
மூட்டைப்பூச்சிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பூச்சிகொல்லியை சுவாசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று பெப்ரவரி 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Bagnolet (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
- பிரான்ஸில் பரிதாபமாக பலியான சிறுமி!
- பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்! நாட்டுக்கு தப்பியோட்டம்!
- இலங்கையில் இளம் பெண்ணால் பரபரப்பு! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!
- தமிழர் பகுதியில் பெரும் துயர சம்பவம்! பரிதாபமாக உயிரிழந்த நபர்!
- தமிழர் பகுதியில் பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த மாணவன்… கதறும் குடும்பம்!
அங்கு வசிக்கும் நபர் ஒருவர் இரவு 11 மணி அளவில் தீயணைப்பு படையினரை உதவிக்கு அழைத்துள்ளார். குடும்பத்தலைவர் ஒருவரும், அவரது 7 மாத கர்ப்பிணி மனைவியும், அவர்களில் 4 மற்றும் 3 வயதுடைய பிள்ளைகளும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி சுவாசிக்க சிரமடைந்துள்ளனர்.
பிரான்சின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள பூச்சி கொல்லியினை மூட்டைப்பூச்சிகளை அழிக்க பயன்படுத்திய நிலையில், குடும்பத்தினர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் André-Grégoire மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.