பிரான்ஸ்

பிரான்ஸில் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு ஏற்பட்ட நிலை! கைதுசெய்யப்பட்ட சாரதி!

மாற்றுத்திறனாளி சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட பேருந்து சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 67 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி மாணவி ஒருவரின் பெற்றோர் ஒருவர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து சாரதியான குறித்த நபர், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சாரதி விரைவில் பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

Back to top button