பிரான்ஸ்

பிரான்ஸில் ஒருவர் திடீர் கைது!

யூத மதத்துக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரை பரிஸ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மார்ச் 1 ஆம் திகதி அன்று பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள யூத தேவாலயம் ஒன்றில் இருந்து 62 வயதுடைய Marco எனும் நபர் வெளியேறிய போது, அவரை மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிழுத்தி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மேற்படி சம்பவம் தொர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர், இன்று மார்ச் 6 ஆம் திகதி புதன்கிழமை காலை குறித்த நபரைக் கைது செய்தனர். தாக்குதல் சம்பவத்துக்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin கண்டனம் வெளியிட்டிருந்தார்.

தாக்குதல் நடத்திய நபர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே இன்று அவர் கைது செய்யப்பட்டார்.

Back to top button