பிரான்ஸ்

பிரான்ஸில் இரண்டு மாதம் கழித்து அபராதம் விதித்த அரசு! அவதானம்!

பாரிசில் (vidéo surveillance) ஒளிப்பதிவு செய்யப்படும் பகுதியில், தான் புகைத்த cigaretteன் அடிக்கட்டையை வீசி எறிந்த நபர் ஒருவருக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று உள்ளது.

குறித்த நபரின் படத்தோடு அவருக்கான அபராத துண்டு இரண்டு மாதங்களுக்கு பின்னர் அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது 15 நாட்களுக்குள் அந்த கட்டணத்தை செலுத்தாவிட்டால் இரட்டிப்பான பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த காகிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரான்சில் இவ்வாண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதினால் மிக தொழில் நுட்பமான ஒலிப்பதிவு கருவிகளின் மூலம் இவை ஒளிப்பதிவு செய்யப்படுகிறது வாகனத்தரிப்பிடங்கள் போன்ற பல அபராதங்கள் இதன் மூலம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button