பிரான்ஸ்

பிரான்ஸில் ஆரம்பமான கோடைகால பயணச்சிட்டை விற்பனை!

கோடை காலத்தின் ஆரம்ப நாட்களுக்கான பயணச்சிட்டைகள் விற்பனை இன்று மார்ச் 7 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
கோடை கால ஆரம்ப நாட்களான மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரையான நாட்களில் பயணம் மேற்கொள்ளக் கூடிய TGV மற்றும் Intercités தொடருந்து சேவைகளுக்கான பயணச்சிட்டைகளை இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

ஜூலை 5 ஆம் திகதிக்கு பின்னரான பயணச்சிட்டைகளை முன்பதிவு செய்ய மார்ச் 13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தொடருந்து கட்டணங்கள் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TGV Ouigo சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

Back to top button