தாயகம்

தமிழர் பிரதேசத்தில் பெண் ஒருவரின் அதிர்ச்சி செயல்! அதிரடி கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரபல பெண் வியாபாரி ஒருவரை அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை நேற்று (04) இரவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது 340 மில்லிக்கிராம் நீல நிறம் கொண்ட புதிய ஐஸ் போதை பொருள் உட்பட 4 கிராம் 470 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருள், 8 ஆயிரத்து 750 ரூபா பணம் என்பவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை முகாம் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அம்பாறை மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் பணிப்பாளர் ஆலோசனைக்கமைய பொறுப்பதிகாரி கே.ஜி.லக்மால் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனை பிறந்துறைச்சேனை பகுதியிலுள்ள குறித்த வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய பெண்ணை விசேட அதிரடிப்படையினர் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும், இவரது கணவர் ஏற்கனவே போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button