உலகம்

ஜேர்மனிக்கு புலம்பெயரும் அகதிகள்! அரசு எடுத்துள்ள முடிவு!

ஒரு காலத்தில் புலம்பெயர்வோரை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனியில், இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. புலம்பெயர்தலை எளிதாக்க திட்டம் வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், இன்று, ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை எக்கச்சக்கமாகிவிட்டது என்று அறிக்கை விடும் அளவுக்கு அவருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன. புகலிடம் கோருவோர் எண்ணிக்கை 51 சதவிகிதம் அதிகரிப்பு ஜேர்மனியில் கடந்த ஆண்டில் மட்டும் புகலிடம் கோரியவர்கள் எண்ணிக்கை 351,915, இது முந்தைய ஆண்டைவிட 51.1 சதவிகிதம் அதிகமாகும்.

ஜேர்மனியில், புலம்பெயர்தல் இன்று பெரிய அரசியல் பிரச்சினையாகிவிட்டது. புதிதாக ஜேர்மனிக்கு வருவோருக்கு இடமளிப்பது கடினமான விடயமாகிவிட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, ஜேர்மன் சேன்ஸலரும், 16 மாகாண ஆளுநர்களும் கூடி, அதிக அளவிலான புலம்பெயர்வோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button