தாயகம்

யாழில் ஆசிரியர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த செல்வரதி விதிதரன் (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை உயிரிழந்த ஆசிரியை 2016ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு தடவை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என்றும், அதற்கு பின்னர் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.


அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Back to top button