உலகம்

🇨🇦கனடா ரொறன்ரோ மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவின் ரொறன்ரோவில் பனிப்புயல் மற்றும் மழையுடனான வானிலை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில், நாளை மறுதினம் பனிப்புயல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை காலை வரையில் இந்த சீரற்றகாலநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவானது சுமார் 15 சென்றிமீற்றர் வரையில் பொழியும் என்பதுடன் மழை வீழ்ச்சி 30 மில்லிமீற்றா வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையும், பனிப்பொழிவுடனான வானிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பனிப்புயல் நிலைமையின் போது மணிக்கு 40 முதல் 60 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button