தாயகம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை!

வீட்டில் தூக்கத்தில் இருந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய நடராசா ரவிக்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை, அவரது முகம் மற்றும் தலை பகுதிகளில் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவரை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Back to top button