பிரான்ஸ்

பிரான்ஸில் மீண்டும் ஆர்ப்பாட்டம்! ஆர்பாட்டக்காரர்களின் முக்கிய கருத்து!

மார்ச் 23, நேற்று சனிக்கிழமை பரிசில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இனவாதத்தினை கண்டித்து இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பிரான்சில் அண்மையில் நடைமுறைக்கு கொண்டுவந்திருந்த ‘குடிவரவு சட்டத்திருத்தத்தைக்’ கண்டித்து, அகதிகள் மீது அரசு கரிசனம் காட்டவில்லை எனவும் தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.

ஆவணங்கள் அற்றோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்து, அவர்களும் இந்நாட்டில் வாழ அனுமதிக்கவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 3 மணி அளவில் Place de la Bastille பகுதியில் இருந்து ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. பின்னர் அங்கிருந்து அவர்கள் Place de la Bataille de Stalingrad பகுதி நோக்கி நகர்ந்து சென்றனர்.


”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” (Liberté, égalité, fraternité) எனும் பிரான்சின் தாரக மந்திரத்தை ‘சுதந்திரம், சமத்துவம், ஆவணங்கள்” (Liberté, égalité, papiers) என அச்சடிக்கப்பட்ட வாசகங்களை சுமந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

Back to top button