பிரான்ஸ்

🇫🇷பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை! மிக அவதானம்!

கடந்த டிசம்பர் 29 முதல் ஜனவரி 2ம் திகதி முதல் Carrefour, Système U, Scachap (Leclerc), Auchan, Relais vert, Naturé மற்றும் Biofrais போன்ற கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ‘lardons bio’ எனப்படும் பன்றி இறைச்சியில் தயாரிக்கப்பட்ட புகையூட்டப்பட்ட ‘Lardons fumés’ மற்றும் ‘Lardons nature’ இரண்டிலும் ‘listeria’ பாக்டீரியா தாக்கம் இருப்பதால் அதனை உண்ணவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உணவாக எடுத்துக் கொண்டவர்கள் காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை நாடும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நரம்பியல் சிக்கல்கள் உள்ளவர்கள் நிட்சயம் மருத்துவர்களை நாடவேண்டும். காரணம் கருவில் உள்ள குழந்தைக்கு பாதிப்புகள் சில சமயங்களில் ஏற்படலாம்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“லிஸ்டீரியோசிஸ் என்பது தீவிரமான நோயாகும், அதன் அடைகாக்கும் காலம் எட்டு வாரங்கள் வரை செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவுப் பொருட்களை வைத்திருப்பவர்கள் கடைகளில் மீளக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button