🇫🇷பிரான்ஸ் பதவி விலகிய பிரதமர்! எதிர்கொண்ட முக்கிய விடயங்கள்!
பிரதமர் Elisabeth Borne நேற்று திங்கட்கிழமை மாலை பதவி விலகியிருந்தார். புதிய பிரதமர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. , Elisabeth Borne பிரதமராக இருந்த போது சந்தித்த சில தகவல்களை இந்த செய்தியில் தொகுத்துள்ளோம்.
Elisabeth Borne பிரதமர் பதவியில் 602 நாட்கள் பதவிவகித்தார். ஒரு வருடமும் ஏழு மாதங்களும் 23 நாட்களும் அவர் பிரதமாக கடமையாற்றியிருந்தார். ஐந்தாம் குடியரசு பிரதமர்களில் குறுகிய காலம் கடமையாற்றிய ஐந்தாவது பிரதமர் இவராவார். அதேவேளை, ஐந்தாம் குடியரசில் பிரதமராக கடமையாற்றிய இரண்டாவது பெண் இவராவார். முன்னதாக Edith Cresson என்பவர் 323 நாட்கள் பிரதமராக கடமையாற்றியிருந்தார்) Elisabeth Borne பிரதமராக கடமையாற்றிய காலத்தில் மொத்தமாக 41 சட்டத்திருத்தங்களை (projets de loi ) நிறைவேற்றியிருந்தார்.
அதில் முக்கியமானவையாக ஓய்வூதிய வயதெல்லை, அணுசக்தி, வாங்கும் திறன் மற்றும் இறுதியாக கொண்டுவரப்பட்ட குடிவரவு சட்டத்திருத்தம் முக்கியமானவையாகும்.
பிரதமர் Elisabeth Borne மீது முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு 49.3 எனும் அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ச்சியாக பயன்படுத்தியிருந்தார் என்பதே. தனது பதவிக்காலத்தின் போது அவர் மொத்தமாக 23 தடவைகள் இந்த 49.3 இனை பயன்படுத்தியிருந்தார்.
தனது ஆட்சிக்காலத்தின் போது மொத்தமாக 31 ‘நம்பிக்கை இல்லா பிரேரணை’யை சந்தித்திருந்தார். மக்ரோனின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் 31 தடவைகள் நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவந்திருந்தது. பாராளுமன்றத்தில் வாக்கெடுக்கப்பட்டது. ஆனால் அவை பலனளிக்கவில்லை.
இறுதியாக Elisabeth Borne பதவிவிலகியுள்ளார். Elisabeth Borne தனது ஆட்சிக்காலத்தின் போது 54 அமைச்சர்களைக் சந்தித்திருந்தார். பலர் பதவி விலகியும், பதவி மாற்றப்பட்டும் மொத்தமாக 54 அமைச்சர்களை சந்தித்திருந்தார். ஜூலை 2022, ஜுலை 2023 ஆகிய மாதங்களில் பிரதமர் மாற்றப்படமால் அமைச்சரவை மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.